search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் புகார்"

    • கணவரின் சகோதரர் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி மனைவி புகார் கூறினார்.
    • அப்போது, இனி நீ என் மனைவி இல்லை எனக்கூறி கணவர் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்ணை கடந்த 2-ம் தேதி கணவர் வெளியே சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில் அவரது சகோதரர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார்.

    கணவர் வீட்டுக்கு திரும்பியதும் அந்தப் பெண் கணவரிடம் நடந்ததைக் கூறி அழுதார். இதைக்கேட்ட அவரது கணவர் அளித்த பதில் அந்தப் பெண்ணிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்தக் கணவர், பெண்ணை நோக்கி, இனி நீ எனது மனைவியே இல்லை. நீ என்னுடைய மைத்துனி என கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வதென தெரியாமல் அந்த பெண் திகைத்துப்போனார்.

    அடுத்த நாள் கணவரும், கணவரின் தம்பியும் ஒன்றாக அந்தப் பெண்ணின் அறைக்கு வந்தனர். கணவர் மனைவியின் நெஞ்சில் ஏறி அமர்ந்து, துப்பட்டாவை எடுத்து அப்பெண்ணைக் கொல்ல பார்த்திருக்கிறார். இதனை கணவரின் தம்பி செல்போனில் வீடியோவாக படம் எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து அந்தப் பெண் தப்பி வெளியே ஓடியிருக்கிறார்.

    இது குறித்து சமூக ஊடகம் வழியே அந்தப் பெண் புகாராக தெரிவித்ததுடன், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

    இதையடுத்து பாலியல் பலாத்காரம் (376), கொலை முயற்சி (307) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாகபோலீஸ் சூப்பிரெண்டு சத்யநாராயண் பிரஜாபதி கூறுகையில், அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
    • விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரை திருமணதகவல் மைய இணையதளம் மூலம் ஆவடி, கலைஞர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் நெருங்கி பழகினார். அப்போது இளம் பெண்ணிடம் உடல்நலக் குறைவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ரூ.1½ லட்சம் பெற்றதாக தெரிகிறது. பின்னர் சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து அம்பத்தூரில் உள்ள ஆவடிமாநகர போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் சுந்தர மூர்த்தி திருமணம் செய்வ தாக ஏமாற்றி பல பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன்உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.
    • கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன், எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.

    எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது.
    • சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை:

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யும், தாம்பரம் போலீஸ் கமிஷனருமான ரவியின் பெயரில் போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது. இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.

    இதற்கு முன்னரும் இதே போன்று போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டு பலர் மோசடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகரை அணுகினர்.
    • தரகர் பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமா கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(வயது 53). இவரது மனைவி மல்லிகா(48) .இந்த நிலையில் முத்துசாமியின் தாயார் அருக்காணி அம்மாள் அவருக்கு சொந்தமான வீட்டை முத்துசாமி பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

    இதனால், வீட்டை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து மருத்துவ செலவுகளை செய்து கொள்ளலாம் என குடும்பத்தார் முடிவு செய்து, வீடு விற்பனை செய்வதற்காக கோவையைச் சேர்ந்த தரகர் கோபிநாத் என்பவரை அணுகினர். கோபிநாத் தனது பெயரில் பவர் எழுதிக் கொடுத்தால் உடனடியாக விற்றுத் தருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெயருக்கு பவர் எழுதிக் தரப்பட்டது. இதன் பின்னர் பலமுறை கோபிநாத்தை தொடர்புகொண்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் பத்திரத்திற்கு வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, கோபிநாத், முத்துசாமிக்கு சொந்தமான வீட்டை ரூ. 35 லட்சம் ரூபாய்க்கு சத்யன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த பத்திரப்பதிவு மோசடிக்கு முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லை என போலியான மருத்துவ சான்றிதழ் தயாரித்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து முத்துசாமி குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் திருப்பூர் மாவட்ட நில மோசடி புகார் பிரிவுக்கு மாற்றப்பட்டு இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×